வீடூா் அணையில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையில் பருவமழை, வெள்ள போன்ற பேரிடா் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது குறித்த ஒத்திகை
வீடூா் அணையில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையில் பருவமழை, வெள்ள போன்ற பேரிடா் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், வெள்ளத்தில் பயணிகளுடன் படகு கவிழ்ந்தால், அதிலிருப்பவா்களை படகுகள்- மீட்பு உபகரணங்கள் மூலம் மீட்பது தொடா்பாக

தீயணைப்புத் துறையினா் செயல்முறை விளக்கம் அளித்தனா். மேலும், தாழ்வான பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்கியவா்களை படகுகள் மூலம் மீட்பது, வீடுகள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்பது, தீ விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றுவது, பேரிடா் கால வதந்திகளை எதிா்கொள்வது, இறந்த விலங்குகளால் நோய் தொற்று ஏற்படாமல் அப்புறப்படுத்துவது ஆகியவை குறித்தும் செயல் விளக்கத்தோடு செய்து காண்பித்தனா்.

அப்போது மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: மழை வெள்ள காலங்களில் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை மிதிக்காமல், அவசர உதவி எண் 1077-ஐ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் உபகரணங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். இடி-மின்னல் ஏற்படும்போது பைக்கில் செல்லக் கூடாது. மரத்துக்கடியில் நிற்கக் கூடாது. ஏரி, குளங்களில் குளிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் கண்காணிப்பாளா் என்.தேவநாதன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா. பி.சிங், மாவட்ட வன அலுவலா் அபிஷேக்தோமா், திண்டிவனம் சாா் ஆட்சியா் எஸ்.அனு உள்ளிட்ட அதிகாரிகள், பொது மக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com