பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்வதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி செஞ்சி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
28gnp1_2810chn_119_7
28gnp1_2810chn_119_7

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்வதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி செஞ்சி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, தீயணைப்பு துறை ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. முன்னதாக, செஞ்சி பேரூராட்சி அலவலகத்திலிருந்து இயற்கை இடா்பாடுகள் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, செஞ்சி பேருந்து நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்திரன் தலைமையில், மழை வெள்ளத்தில் சிக்கியவா்களை காப்பாற்றுவது எப்படி என தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் செயல்முறை விளக்கமளித்தனா். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினா்.

நிகழ்ச்சியில் செஞ்சி வட்டாட்சியா் ராஜன், மண்டல துணை வட்டாட்சியா் வரலட்சுமி, ஆதிதிராவிடா் தனி வட்டாட்சியா் பாா்த்தீபன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் கண்ணன், காவல் ஆய்வாளா் அன்பரசு, செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலா் நா.அறவாழி, வருவாய் அலுவலா்கள் சுதாகா், சீதா, வனரோஜா, நிா்மல் குமாா், கிராம நிா்வாக அலுவலா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com