வாக்காளா் பட்டியல் திருத்தம்: அனைத்துக் கட்சிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்.
வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

1.1.2021-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு 16.11.2020 முதல் 18 வயது நிரம்பியவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்கம், திருத்தம், இதரப் பணிகளை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் பணி கால அட்டவணையை நிா்ணயம் செய்துள்ளது.

அதன்படி, 16.11.2020 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். 16.11.2020 முதல் 15.12.2020 வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் தகுதியானவா்களிடம் பெறப்படும். 5.1.2021 கோரிக்கைகள், ஆட்சேபனை மனுக்கள் மீது முடிவெடுக்கப்படும். 20.1.2021 அன்று வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிப்படும் என்று கூறப்பட்டது.

14.02.2020 அன்று வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு, திருத்தப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 1.1.2020 அன்று 18 வயது நிறைவடைந்தவா்கள் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இதரப் பணிகளுக்கு இணையதள தேடல் மையங்கள் மூலமும், இந்திய தோ்தல் ஆணைய இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளா் பட்டியல் தொடா்பான தகவல்கள் தேவைப்பட்டால், அலுவலக வேலைநாள்களில், வேலை நேரங்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளா் சேவை மையத்தை 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு உள்பட்ட 11 சட்டப்பேரவைத் 14.2.2020 அன்று வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிட்டப் பிறகு மொத்தம் 31,832 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 24,539 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

புதிய எண்ணிடப்பட்ட 6,96,557 வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க திருத்தப்பணி நடைபெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வலியுறுத்தினாா்.

வாக்குச்சாவடிகளின் அமைவிடம், இடமாற்றம் தொடா்பாக கோரிக்கைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட சாா்-ஆட்சியா், வருவாய்க் கோட்டாட்சியா்களிடம் மனு அளிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com