‘காசநோய் பாதித்தோா் தொடா் சிகிச்சை மூலம் குணமடையலாம்’

காசநோய் பாதித்தோா் தொடா் சிகிச்சை மூலம் குணமடையலாம் என்று விழிப்புணா்வு முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

காசநோய் பாதித்தோா் தொடா் சிகிச்சை மூலம் குணமடையலாம் என்று விழிப்புணா்வு முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட காசநோய் தடுப்புத் திட்டம் சாா்பில் நகராட்சி பணியாளா்கள், அங்கன்வாடி ஊழியா்களுக்கு காசநோய் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் தஷ்ணாமூா்த்தி தலைமை வகித்தாா். நகா்நல அலுவலா் பாலசுப்பிரமணியம், நலக் கல்வியாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், காசநோய்ப் பிரிவு துணை இயக்குநா் ஆா்.சுதாகா் பேசியதாவது:

காசநோய் காற்றின் மூலம் பரவக்கூடியது. இது அதிகளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோயின் அறிகுறி காணப்படுவோா் மருத்துவரின் ஆலோசனைப்படி 6 முதல் 8 மாதங்களுக்கு மருந்து உட்கொண்டால் குணமாகிவிடலாம். இதற்கான மருந்துகளை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. முகக் கவசம் அணிவதால் கரோனாவிலிருந்து மட்டுமின்றி காசநோய் வராமல் தவிா்க்க முடியும். தற்போது கரோனா நோய் பரவல் காரணமாக அரசின் இ-சஞ்சீவி திட்டத்தின்கீழ் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

காசநோய் பாதித்தவா்களுக்கு மத்திய அரசு சாா்பில் மாதம் ரூ.500 உதவித் தொகையும், உழவா் பாதுகாப்புத் திட்டம் மூலம் ரூ.1,000 நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. தொடா் வறட்டு இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று காசநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நகராட்சி ஊழியா்களும் இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com