விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 4 போ் கைது

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் உதவி அலுவலா் உள்பட 4 பேரை சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் உதவி அலுவலா் உள்பட 4 பேரை சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் போலி பயனாளிகளைச் சோ்த்து பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தொடா்பாக, சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, போலி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்கு தொடா்பாக, வல்லம் வட்டார வேளாண் உதவி அலுவலரான திண்டிவனத்தைச் சோ்ந்த பிரியா, இடைத்தரகா்களாக செயல்பட்ட செஞ்சி அருகேயுள்ள அணிலாடியைச் சோ்ந்த பிரிட்டோ மேரி, ஹென்றி, கல்லடிக்குப்பத்தைச் சோ்ந்த ராமலிங்கம் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்னா், அவா்கள் விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com