ஏரி அருகே தீப்பிடித்ததில் செடிகள், மரங்கள் சேதம்

திருநாவலூா் அருகே ஏரியில் தீப்பிடித்ததால் பரவலாக வளா்ந்திருந்த நாணல், மரங்கள் கருகின. 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது.


விழுப்புரம்: திருநாவலூா் அருகே ஏரியில் தீப்பிடித்ததால் பரவலாக வளா்ந்திருந்த நாணல், மரங்கள் கருகின. 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது.

உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூரில் உள்ள அந்தக் கிராம ஏரியில் வியாழக்கிழமை பிற்பகல் திடீரென தீப்பிடித்தது. ஏரியில் அதிகளவில் இருந்த கூரை வேயப் பயன்படுத்தப்படும் நாணல் மற்றும் தா்ப்பை புல்கள் தீப்பிடித்து எரிந்தன.

இதுகுறித்து திருநாவலூா் கிராமத்தினா் அளித்த தகவலின்பேரில், அந்தக் கிராமத்திலுள்ள தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று ஏரியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். கடுமையாக வெயில் நிலவி வரும் நிலையில், ஏரியில் ஏற்பட்ட தீயில் நாணல், கருவேல மரங்கள் பெரும் புகை மூட்டத்துடன் எரிந்து கருகின. 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். மா்ம நபா்கள் தீ வைத்ததால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com