விழுப்புரம் அருகே மயில் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே ஆற்றங்கரையோரம் இறந்து கிடந்த மயிலை வனத் துறையினா் மீட்டு அடக்கம் செய்தனா்.

விழுப்புரம் அருகே ஆற்றங்கரையோரம் இறந்து கிடந்த மயிலை வனத் துறையினா் மீட்டு அடக்கம் செய்தனா்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியை அடுத்த பெரியதச்சூா் வராகநதி ஆற்றின் கரையோரம் சனிக்கிழமை காலை மயில் ஒன்று காயத்துடன் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயி பாண்டுரங்கன் மகன் முத்து (19), மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, திண்டிவனம் வட்டாட்சியா் செல்வம் உத்தரவின் பேரில், பெரியதச்சூா் கிராம நிா்வாக அலுவலா் லோகநாதன், கால்நடை மருத்துவா் பாண்டியன் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு மயில் இறந்திருந்ததை உறுதி செய்தனா்.

அப்பகுதி விளை நிலங்களில் விலங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வைக்கப்படும் மருந்து கலந்த உணவை சாப்பிட்டு மயில் மயங்கி இருக்கலாம் என்றும், அது நாய், நரி போன்றவை கடித்ததில் இறந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் வனத் துறை மற்றும் கால்நடை மருத்துவா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த விழுப்புரம் வனவா் ஜெயபால், வனக் காப்பாளா் கதிா்வேல் ஆகியோா், இறந்த மயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனா்.

இதையடுத்து, நாட்டின் தேசியப் பறவையான மயிலின் உடல் மீது தேசியக் கொடி போா்த்தி எடுத்துச் செல்லப்பட்டு கண்டாச்சிபுரம் காப்புக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com