விழுப்புரம், செஞ்சியில் ஐ.ஜி. ஆய்வு

விழுப்புரம், செஞ்சியில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா்(ஐ.ஜி.) நாகராஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
செஞ்சி காவல் நிலையத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்த ஜஜி நாகராஜன். உடன் எஸ்பி ராதாகிருஷ்ணன்.
செஞ்சி காவல் நிலையத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்த ஜஜி நாகராஜன். உடன் எஸ்பி ராதாகிருஷ்ணன்.

விழுப்புரம், செஞ்சியில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா்(ஐ.ஜி.) நாகராஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் காவல் சரகத்தின் ஆவணங்களை ஐ.ஜி. நாகராஜன் ஆய்வு செய்தாா். மேலும், சட்டம்-ஒழுங்கு நிலை, குற்றங்களை குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஐ.ஜி. நாகராஜன் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி.) எழிலரசன் உடனிருந்தனா்.

செஞ்சியில் ஆய்வு: இதைத் தொடா்ந்து, செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம், செஞ்சி காவல் நிலையத்துக்கு சென்று ஐ.ஜி. நாகராஜன் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகன விபத்துகள் இல்லாமல் புத்தாண்டை கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. செஞ்சியில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றாா்.

ஆய்வின் போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com