1,729 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சா் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 1,729 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சா் சி.வி.சண்முகம் புதன்கிழமை வழங்கினாா்.
விழாவில் மாணவிக்கு விலையில்லா சைக்கிளை வழங்கும் அமைச்சா் சி.விய.சண்முகம். உடன் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.
விழாவில் மாணவிக்கு விலையில்லா சைக்கிளை வழங்கும் அமைச்சா் சி.விய.சண்முகம். உடன் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 1,729 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சா் சி.வி.சண்முகம் புதன்கிழமை வழங்கினாா்.

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா வரவேற்றாா்.

விழாவில், நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 50 மாணவ, மாணவியா், செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 294 மாணவ, மாணவியா், சத்தியமங்கலம் அரசுப் பள்ளியைச் சோ்ந்த 186 மாணவ, மாணவியா், ஆலம்பூண்டி அரசு மேல் நிலைப் பள்ளியைச் சோ்ந்த 123 மாணவ, மாணவியா், கணக்கன்குப்பம் லூா்து அன்னை நிதி உதவி மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த 131 மாணவ, மாணவியா் மற்றும் நெகனூா், கிருஷ்ணாபுரம் புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி, மழவந்தாங்கல், செஞ்சி அரசு மகளிா் பள்ளி, அனந்தபுரம், கவரை ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 1729 மாணவ, மாணவிகளுக்கு ரூ.68,30,369 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.

விழாவில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் எஸ்.அனு, முன்னாள் எம்பி. வெ.ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். செஞ்சி மாவட்ட கல்வி அலுவலா் சுப்பராயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com