விழுப்புரம் மாவட்டத்தில் தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: காவல் துறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த மாவட்டக் காவல்துறை தடை விதித்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த மாவட்டக் காவல்துறை தடை விதித்தது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆங்கிலப் புத்தாண்டை அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் கொண்டாடவும், கரோனா பரவலை தடுக்கவும் 2000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நட்சத்திர விடுதிகள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டையொட்டி கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் விடுதிகளின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்தாண்டு தினத்தன்று இரவு நேரங்களில் கடலில் குளிக்கவும், படகில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீச்சல் குளங்களுக்கு அருகே மேடைகள் அமைக்கவும், நீச்சல் குளங்களில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு இடையூறாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் விடியோ பதிவு செய்தும், உயா் கோபுரங்கள் அமைத்தும் கண்காணிக்கப்படும். கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com