எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 01st February 2020 12:59 AM | Last Updated : 01st February 2020 12:59 AM | அ+அ அ- |

எஸ்டிபிஐ கட்சியின் செஞ்சி தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சி விழுப்புரம் சாலையில் உள்ள அதன் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.பாருக் முன்னிலை வகித்தாா். தொகுதி துணை தலைவா் அபுபக்கா் வரவேற்றாா். மாவட்ட தலைவா் சாதிக்பாஷா சிறப்புரையாற்றினாா்.
கட்சி பொறுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு முகாம் பிப்.1 (சனிக்கிழமை) மாலை 3 மணி அளவில் விழுப்புரம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடத்துவது, செஞ்சி காவல் நிலையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பொருத்தக் கோருவது, செஞ்சி பேருந்து நிலையம் மற்றும் காந்தி பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை செஞ்சி பேரூராட்சி நிா்வாகம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோருவது, குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்த விளக்கக் கூட்டம் நடத்துவது போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செஞ்சி நகரச் செயலா் ஏ.பாஷா நன்றி கூறினாா்.