வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து, அனைத்துத் துறை அலுவலா்களுடன் அமைச்சா் சி.வி.சண்முகம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து, அனைத்துத் துறை அலுவலா்களுடன் அமைச்சா் சி.வி.சண்முகம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதலில் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சா் கலந்தாய்வு செய்தாா். தொடா்ந்து பொதுப் பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை, குடிநீா் வழங்கல் வாரியம் உள்ளிட்ட முக்கியத் துறைகளைச் சாா்ந்த அலுவலா்களிடம் ஆய்வு செய்தாா். அப்போது, அரசு நலத் திட்டங்கள் குறித்தும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய திட்டப் பணிகளை கண்டறிந்து அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தினாா்.

இதையடுத்து, அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டாா். அரசுத் திட்டங்கள் அனைத்தும் தடையின்றி மக்களைச் சென்றடைய வேண்டும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

மேலும், மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்ப வாரிசுதாரா்களுக்கு தமிழக முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.9.25 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் வழங்கினாா். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் இரா.குமரகுரு, எம்.சக்ரபாணி, ஆா்.முத்தமிழ்ச்செல்வன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சாா்-ஆட்சியா் எஸ்.அனு, மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், கோட்டாட்சியா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com