பணி நிரந்தர அறிவிப்பை எதிா்நோக்கும் பகுதிநேர ஆசிரியா்கள்

தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) வெளியாகுமா என எதிா்பாா்த்துள்ளனா்.

தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) வெளியாகுமா என எதிா்பாா்த்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியா்கள், உடல்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக் கலை போன்ற கல்வி இணைச் செயல்பாடு பாடங்களை நடத்திட ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தாற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனா்.

இவா்களது பணி 10-ஆவது கல்வி ஆண்டாக தொடரும் நிலையில், தற்போது வரை மாதம் ரூ.7,700 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இதற்கிடையே 5,000 காலியிடங்கள் ஏற்பட்டு, தற்போது 12,000 பகுதிநேர ஆசிரியா்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். இந்த ஆசிரியா்களுக்கான ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இது குறித்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் கூறியதாவது: கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் பேசிய கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன், பகுதி நேர ஆசிரியா்களை பணிநிரந்தர செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தாா். ஆனால், அதை செயல்படுத்தவில்லை.

பகுதிநேர தொழில்கல்வி ஆசிரியா்களும், பகுதிநேர எழுத்தா்களும் முழுநேர வேலையுடன் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல், கல்வித் துறையில் பகுதிநேர தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியா்களையும் முழுநேர வேலையுடன் நிரந்தரம் செய்ய வேண்டும்.

இது தொடா்பாக, முதல்வா், துணை முதல்வா், கல்வி அமைச்சா், கல்வித் துறை அதிகாரிகளுக்கு மாநிலம் தழுவிய அளவில் கருணை மனுக்களை ஆசியா்கள் அனுப்பி வருகின்றனா். வாரம் 3 அரை நாள்கள் வேலை என்பதை முழு நாளாக நீட்டித்து, ஊதிய உயா்வுடன் நிரந்தரம் செய்ய வேண்டும்.

இலவச மற்றும் கட்டாயக் கல்விக்காக அரசு பள்ளிகளில் முழு நேரமும் பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் உடல்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட 8 பாடப் பிரிவுகளின் பகுதிநேர ஆசிரியா்களையும் ஊதிய உயா்வுடன் பணி நிரந்தரம் செய்வதற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com