மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம்

முதல்வா் கோப்பைக்கான விழுப்புரம் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (பிப்.15) தொடங்கி திங்கள்கிழமை (பிப்.17) வரை நடைபெறகிறது.

முதல்வா் கோப்பைக்கான விழுப்புரம் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (பிப்.15) தொடங்கி திங்கள்கிழமை (பிப்.17) வரை நடைபெறகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணைய மாவட்டப் பிரிவு மூலமாக விழுப்புரத்தில் பிப்ரவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

பிப்ரவரி 15-ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆண்களுக்கு கபடி, வாலிபால் (கையுந்து பந்து), ஹாக்கி, கூடைப்பந்து ஆகியவையும், பெண்களுக்கு கபடி, வாலிபால் ஆகியவையும் நடைபெறும். பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் இரு பாலருக்கும் தனித்தனியே இறகுபந்துப் போட்டி நடைபெறும்.

16-ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆண்களுக்கு டென்னிஸ், ஜூடோ போட்டியும், பெண்களுக்கு டென்னிஸ், ஹாக்கி, கூடைப்பந்து, ஜூடோ ஆகிய போட்டிகளும் நடைபெறும். பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இரு பாலருக்கும் தனித்தனியே பல்வேறு பிரிவுகளில் நீச்சல் போட்டிகள் நடைபெறும். பெருந்திட்ட வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் இரு பாலருக்கும் தனித்தனியே பல்வேறு பிரிவுகளின்கீழ், குத்துச் சண்டை போட்டிகளும் நடைபெறும்.

பிப்ரவரி 17-ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளப் போட்டிகள் இரு பாலருக்கும் தனித்தனியே பல்வேறு பிரிவுகளின்கீழ் நடைபெறும்.

25 வயதுக்கு உள்பட்டவா்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம். இந்தப் போடிகளில் கலந்துகொள்ள விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கும். தாமதமாக வருவோா் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

போட்டியில் பங்கேற்பவா்கள் விழுப்புரம் மாவட்டத்தில் வசிப்பதற்கான ஆதா் அட்டை, குடும்ப அட்டை, பிறந்த தேதி சான்றிதழ், கல்வி நிறுவன அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றை போட்டி தொடங்குவதற்கு முன்பாக போட்டி நடத்துபவா்களிடம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com