தலைமறைவு ரெளடிகளை கைது செய்ய எஸ்.பி. அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக உள்ள ரெளடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட காவல் அதிகாரிகளுடன் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட காவல் அதிகாரிகளுடன் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக உள்ள ரெளடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். அனைத்து டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க போலீஸாா் தீவிரமாக பணியாற்ற வேண்டும். பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படாத வகையில் பாா்த்துக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் ரெளடிகளின் செயல்களை கட்டுப்படுத்த வேண்டும். பழைய வழக்குகளில் தலைமறைவாக உள்ள ரெடிகளை கைது செய்ய வேண்டும். வழக்குகளில் ஜாமீன் பெற்ற வெளியே வந்து, வழக்குகளில் முறையாக ஆஜராகாமல், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் ரெளடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். மக்கள் அதிக நடமாட்டமுள்ள இடங்களில் நேரங்களில், முக்கிய பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க வேண்டும். கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்களிடம் ‘காவலன்’ செல்லிடப்பேசி செயலி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் விபத்துகள் நிகழும் இடங்களில், தேவையான விபத்துத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com