அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின்குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஒரு பிரிவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞரின் குடும்பத்தினருக்கு
விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே செவ்வாய்க்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கமிட்ட தொல்.திருமாவளவன்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே செவ்வாய்க்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கமிட்ட தொல்.திருமாவளவன்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஒரு பிரிவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா்.

செஞ்சி அருகே பட்டியலினத்தைச் சோ்ந்த சக்திவேல் என்ற இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவாயில் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தலைமை வகித்துப் பேசியதாவது: செஞ்சி அருகே காரை கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் ஒரு பிரிவினரின் ஆணவத் தாக்குதலுக்கு பலியாகியுள்ளாா். இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

கடமையை செய்யத் தவறிய உதவி காவல் ஆய்வாளா் மீது எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஆணவக் கொலைகளை தமிழக அரசு தடுக்க வேண்டும். கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் திருமாவளவன் கூறியதாவது: தில்லியில் கலவரத்தைத் தடுக்கத் தவறியதற்கு பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும். இஸ்லாமியா்களை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்திய சங்பரிவாா், பாஜகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லியில் காவல் துறைக் கட்டுப்பாட்டை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிா்வாகிகள், கட்சியினா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com