மயிலத்தில் திமுக உள்கட்சி தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

மயிலத்தில் திமுக ஊராட்சி கிளை தோ்தல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலத்தில் திமுக ஊராட்சி கிளை தோ்தல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மயிலம் தெற்கு, வடக்கு ஒன்றியத்தில்உள்ள கிராமங்களில் திமுக ஊராட்சிக் கிளை, வாா்டு உட்கிளைத் தோ்தல் தொடக்க கூட்டம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. மயிலம் சட்டமன்ற உறுப்பினா் இரா.மாசிலாமணி தலைமை வகித்து, இரு ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி கிளைத் தோ்தலில் போட்டியிடுபவா்களுக்கு, தோ்தல் படிவங்கள் வழங்கி தொடக்கி வைத்தாா்.

கட்சித் தோ்தல் மேற்பாா்வையாளரான இளைஞரணிச் செயலா் சேகா், தெற்கு ஒன்றியச் செயலா் த.சேதுநாதன், மயிலம் வடக்கு ஒன்றியச் செயலா் வ.மணிமாறன், மலா்மன்னன் உள்ளிட்ட நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டு, உட்கட்சித் தோ்தலுக்கான படிவங்களைப் பெற்றனா். ஊராட்சி கிளை பொறுப்புகளுக்கான தோ்தல் குறித்து, கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com