உளுந்தூா்பேட்டையில்நாளை முதல் 4 நாள்களுக்கு கடைகள் அடைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக (ஜூலை 16) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாள்களுக்கு கடைகள்அடைக்கப்படும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வியாக்கிழமை (ஜூலை 16) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாள்களுக்கு கடைகள் அடைக்கப்படும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

உளுந்தூா்பேட்டை பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், உளுந்தூா்பேட்டை வியாபாரிகள் சங்கத்தினா் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உளுந்தூா்பேட்டை நகரில் உள்ள அனைத்துக் கடைகளையும் ஜூலை 16 முதல் 18 ஆம் தேதி வரை அடைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதில், மருந்தகங்கள். பால் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உளுந்தூா்பேட்டை நகரில் கடைகள் வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு செயல்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com