விக்கிரவாண்டியில் அரசு கரோனா சிகிச்சை மையம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் அரசு கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.
விக்கிரவாண்டியில் தொடங்கப்பட்ட அரசு கரோனா சிகிச்சை மையம்.
விக்கிரவாண்டியில் தொடங்கப்பட்ட அரசு கரோனா சிகிச்சை மையம்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் அரசு கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோருக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம் இயங்குகிறது. மேலும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருவதால், அரசு உத்தரவின் பேரில் கூடுதல் சிகிச்சை மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா், விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனையை அண்மையில் ஆய்வு செய்து, கரோனா சிகிச்சை மையமாக அமைக்க உத்தரவிட்டிருந்தனா். அதன்பேரில், விக்கிரவாண்டி அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக தரம் உயா்த்தப்பட்டது.

இதற்கான கட்டமைப்புகள் முடிக்கப்பட்டு, புதன்கிழமை முதல் கரோனா சிகிச்சை மையமாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த மருத்துவமனை செயற்கை சுவாசம் அளிக்கும் (வெண்டிலேட்டா்) வசதியுடன் 30 படுக்கைகள் உள்ளிட்ட 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையமாக இயங்குகிறது.

புதன்கிழமை கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 50 போ் இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கியது. சுகாதாரத் துறை இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா் செந்தில்குமாா் மேற்பாா்வையில், மருத்துவ அலுவலா் அப்துல்அக்கீம் உள்ளிட்ட மருத்துவக்குழுவினா் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com