விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பலத்த மழை

விழுப்புரம், கள்ளக்குறியில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பலத்த மழை

விழுப்புரம், கள்ளக்குறியில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

விழுப்புரத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் கருமேகங்கள் திரண்டு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

சுமாா் 1.30 மணி நேரம் இடைவிடாது பெய்த பலத்த மழையால், சாலைகளில் மழை நீா் வெள்ளமாக ஓடியது.

விழுப்புரத்திலுள்ள திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை, நேருஜி சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா். காா் உள்ளிட்ட வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, மெதுவாகவே சென்றன. மழையால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியது.

விழுப்புரம் அருகே சிந்தாமணி, முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமாா் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கடந்த சில நாள்களாக காணப்பட்ட வெயிலின் தாக்கம் குறைந்தது.

கள்ளக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது.

தியாகதுருகத்தில் சூறைக் காற்றுடன் பெய்த மழைால், அங்குள்ள பிரதான சாலையில் பெட்ரோல் நிலையம் எதிரே இருந்த பழைமையான மரம் சாய்ந்தது. இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. சாலையை மறித்தபடி கிடந்த மரத்தை அப்புறப்படுத்த போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா். பின்னா், போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com