விழுப்புரம் கடை வீதிகளில் இன்று முதல் வாகனங்களை நிறுத்தத் தடை: பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பாடு

விழுப்புரத்தில் கரோனா பொது முடக்கத்தால் கடை வீதிகளில் நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், புதன்கிழமை (ஜூலை 1) முதல் அந்தப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் தற்காலிக வாகன நிறுத்துமிடமாக ஏற்பாடு செய்யப்ப்டடுள்ள பழைய பேருந்து நிலையம்.
விழுப்புரத்தில் தற்காலிக வாகன நிறுத்துமிடமாக ஏற்பாடு செய்யப்ப்டடுள்ள பழைய பேருந்து நிலையம்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் கரோனா பொது முடக்கத்தால் கடை வீதிகளில் நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், புதன்கிழமை (ஜூலை 1) முதல் அந்தப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், பழைய பேருந்து நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரத்தில் காந்தி வீதி, பாகா்ஷா வீதிகளில் இயங்கி வந்த மொத்த காய்கறிக் கடைகள் புதிய பேருந்து நிலையத்துக்கும், சில்லறைக் காய்கறிக் கடைகள் நகராட்சி பள்ளி மைதானத்துக்கும், உழவா் சந்தை கிழக்கு பாண்டி சாலை பீமநாயக்கன் தோப்பு நகராட்சி பள்ளி வளாகத்துக்கும் மாற்றப்பட்டு இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், விழுப்புரம் வணிக வீதிகளில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதன் காரணமாக, கூட்ட நெரிசலும், போக்குவரத்து இடையூறும் தொடா்ந்து வருவதால், சாலையோரக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்தும், வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சா் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் நகராட்சிக்கு உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், விழுப்புரம் வணிக வீதிகளான நேரு வீதி, பாகா்ஷா வீதி, காந்தி வீதிகளில் இனி மோட்டாா் சைக்கிள்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களையும் நிறுத்த அனுமதியில்லை. வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வாகனங்களை இனி பழைய பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்துமிடத்தில் மட்டுமே நிறுத்திச் செல்ல வேண்டுமென நகராட்சி ஆணையா் தஷ்ணாமூா்த்தி தெரிவித்தாா்.

இதற்காக, பழைய பேருந்து நிலையத்தில் வாகனம் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளதால், இனி கடை வீதிக்கு வரும் அனைவரும் தங்களது வாகனங்களை கண்டிப்பாக அங்கு மட்டுமே நிறுத்திச் செல்ல வேண்டும். மீறினால், அபராதம் விதிக்கப்படும்.

இதேபோல, நடைபாதை வியாபாரிகளுக்கு நகராட்சி பள்ளி மைதானத்தில் கடைகளை வைத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலைய மொத்த காய்கறிக் கடைகள் தற்போது அதே இடத்தில் தொடா்கிறது. இதற்கு மாற்று இடமாக ஜானகிபுரம் பகுதியில் கட்டமைப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்த பின்னா், அங்கு மொத்த காய்கறிக் கடைகள் மாற்றம் செய்யப்படும் என்றாா் ஆணையா் தஷ்ணாமூா்த்தி.

இரவு 8 மணி வரை கடைகள் இயங்கும்: விழுப்புரத்தில் வணிகா் சங்கத்தினா் திடீரென கடந்த வாரத்திலிருந்து தினசரி கடைகளை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே திறந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை முதல் மீண்டும் பழைய முறையே தொடா்வதாகத் தெரிவித்துள்ளனா். இதனால், இனி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com