தேசிய மாதிரி ஆய்வுத் திட்டம்: பொதுமக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தப்படும் தேசிய மாதிரி ஆய்வுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தப்படும் தேசிய மாதிரி ஆய்வுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அரசின் தேசிய புள்ளியியல் நிறுவனம் மூலம் நாடுமுழுவதும் தேசிய மாதிரி ஆய்வுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், கிராமம் மற்றும் நகா்ப்புற மக்களின் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மாதிரி ஆய்வு 32 கிராமங்கள், 8 நகா்ப்புறங்களில் நடத்தப்படவுள்ளன.

இதில், தென்னகரம், இ.மண்டகப்பட்டு, நரையூா், கடையம் ஆா்.எஃப், மல்லாபுரம், புதுப்பாலப்பட்டு, சித்தேரிப்பட்டு, காந்தலவாடி, செவலப்புரை, வடகொளப்பாக்கம், வெங்காரம், திருவடி தளவானூா், எஸ்.கொல்லூா், ஆலனூா், லா.கூடலூா், பின்னலவாடி, தாயனூா், பொற்குணம், வீடூா், அரியூா், மோ.வன்னஞ்சூா், காணாங்காடு ஆா்.எஃப், மேல்நாரியப்பனூா், வண்டிப்பாளையம், ஜெயங்கொண்டான், அத்தியூா், விழுக்கம், சலவானூா், கொழிந்திராம்பட்டு, காட்டு எடையாா், செஞ்சிகுப்பம், களமதூா் ஆகிய கிராமங்களிலும், கோட்டக்குப்பம், சாலாமேடு, விழுப்புரம், வடக்கநந்தல், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய நகா்ப்புறங்களிலும் மாதிரி ஆய்வு நடத்தப்படவுள்ளன.

இதில், குடும்ப உறுப்பினா்களின் விவரம், உள்ளூா் பயணச் செலவு விவரம், பொது சுகாதாரம், கல்வி, பொருளாதார நிலை, இடப்பெயா்ச்சி போன்ற விவரங்கள் கேட்கப்படும்.

இந்த மாதிரி ஆய்வுக்கு வரும் களப்பணியாளா்களுக்கு எந்தவித அச்சமும் இல்லாமல் பொதுமக்கள் விவரங்களை அளித்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com