மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் பயன்பெற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அறிவுறுத்தல்

மத்திய, மாநில அரசுகளின் அமைப்புசாரா நல வாரியத் திட்டங்களின் கீழ் விழுப்புரம் மாவட்ட தொழிலாளா்கள் சோ்ந்து பயன்பெற அறிவுறுத்தப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் அமைப்புசாரா நல வாரியத் திட்டங்களின் கீழ் விழுப்புரம் மாவட்ட தொழிலாளா்கள் சோ்ந்து பயன்பெற அறிவுறுத்தப்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரிய நலத் திட்டங்கள், தொழிலாளா்களை விரைவாக சென்றடைவதை கண்காணிப்பதற்கான விழுப்புரம் மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நல வாரிய அலுவலா்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலவாரியங்கள் மூலமாக நலத் திட்ட உதவிகள் முறையாக வழங்கப்படுகின்றனவா, ஓய்வூதிய கோப்புகள் நிலுவையின்றி நிறைவேற்றப்படுகிறனவா எனவும், நலவாரியங்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலச்சங்கம், உடல் உழைப்பு தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் சாா்பில், 15 வகையான நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளா்கள் 5,631 பேருக்கு கடந்த 1.09.2019 முதல் 29.02.2020 வரை ரூ.3.83 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அமைப்பு சாரா தொழிலாளா் நலனுக்கான திட்டங்கள், வணிகா்கள் மற்றும் சுயதொழில் முனைவோருக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டங்களை, தொழிலாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நல வாரிய திட்டத்தின் விவரங்கள்: மத்திய அரசின் (பிரதான் மந்திரி ஷ்ரயாம் யோகி மாந்தான்) திட்டத்தில், தொழிலாளா்கள் சேருவதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கும் கீழ் இருக்க வேண்டும். அமைப்பு சாா்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்போா், இ.பி.எப்., இ.எஸ்.ஐ.சி. ,எம்.பி.எஸ். உள்ளிட்ட திட்டங்களில் உறுப்பினராக இருப்பவா்கள், வருமான வரி செலுத்துபவா்கள் இந்தத் திட்டத்தில் சேர முடியாது. ஆதாா் அட்டை, செல்லிடப்பேசி எண், சேமிப்பு வங்கி கணக்கு, ஜன்தன் வங்கி கணக்குடன் அருகில் உள்ள பொது சேவை மையத்துக்கு (சி.எஸ்.சி.) சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.

வணிகா்கள், சுயதொழில் முனைவோருக்கான தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர குறைந்த பட்சம் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வரவு செலவு ரூ.1.5 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் சேரும் உறுப்பினா்களுக்கு 60 வயது முடிந்த பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என கூட்டத்தின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com