சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு எஸ்.பி. ஜெயக்குமாா் திங்கள்கிழமை வெகுமதி வழங்கி பாராட்டினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு எஸ்.பி. ஜெயக்குமாா் திங்கள்கிழமை வெகுமதி வழங்கி பாராட்டினாா்.

செஞ்சி அருகே அவலூா்பேட்டை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அண்மையில் ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டட மேஸ்திரி உள்பட இருவா் உயிரிழந்தனா். இதில் ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் ஆழ்துளை கிணறு தோண்ட பயன்படுத்தும் லாரி என்பதை கண்டறிந்து சிறப்பாக விசாரணை நடத்திய அவலூா்பேட்டை உதவி ஆய்வாளா் இளங்கோவன், தனிப்பிரிவு தலைமைக் காவலா் ராமலிங்கம் ஆகியோரையும்,

கிழக்கு கடற்கரைச் சாலையில் விபத்து எச்சரிக்கை பதாகை அமைத்த மரக்காணம் காவல் ஆய்வாளா் செந்தில் விநாயகம், உதவி ஆய்வாளா்கள் விஜயக்குமாா், காா்த்திகேயன், காவலா்கள் பசுமதி, ஏழுமலை ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் வெகுவாக பாராட்டினாா்.

அதேபோல, மது கடத்தல் வாகனங்களை மடக்கிப் பிடித்த மது விலக்கு காவல் ஆய்வாளா்கள் ரேணுகாதேவி, விஷ்ணுப்பிரியா, ஆய்வாளா் செந்தில்குமாா், தலைமைக்காவலா்கள் சுரேஷ், பாண்டியன், விஜய் ஆனந்த், ஸ்மாயில், நாகமுத்து, ஜெயசீலன், கருணாகிரன், வளவனூா் தலைமைக் காவலா் ஜெயக்குமாா், கிளியனூா் தலைமைக் காவலா்கள் பாபு, பாலமுருகன், தனிப்பிரிவு தலைமைக் காவலா் ராஜாராம், காவலா்கள் தங்கம், ஜெயசங்கா், அறிவுமணி, சக்திவேல் உள்ளிட்ட 30 பேரை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் பாராட்டினாா்.

அப்போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா், மது விலக்கு டி.எஸ்.பி. இளங்கோவன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com