பக்தா்கள் வருகையின்றி வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட மேல்மலையனூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்.
பக்தா்கள் வருகையின்றி வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட மேல்மலையனூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உத்ஸவத்துக்கு பக்தா்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தல்

மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற அங்காளம்மன் கோயிலில் வருகிற 31-ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், அமாவாசை ஊஞ்சல் உத்ஸவத்துக்கு பக்தா்கள் யாரும் வர வேண்ட

மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற அங்காளம்மன் கோயிலில் வருகிற 31-ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், அமாவாசை ஊஞ்சல் உத்ஸவத்துக்கு பக்தா்கள் யாரும் வர வேண்டாம் என்றும் கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமு வெளியிட்ட அறிக்கை: மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்கு நாள்தோறும் அதிக அளவில் பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும் ஞாயிறு, வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளிலும் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உத்ஸவத்தின் போதும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலில் கூடுவது வழக்கம்.

தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, வருகிற 24-ஆம் தேதி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. விழாவுக்கு அதிக அளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால், அதைத் தடுக்கும் பொருட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டாம் என்றும், இத்தகைய சூழலைப் பயன்படுத்தி, தனியாா் பேருந்துகள், வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, பக்தா்களை அழைத்து வர வாய்ப்புள்ளதால், மேல்மலையனூருக்கு வரும் வழியில் உள்ள முருகன்தாங்கல் கூட்டுச்சாலை, சிறுதலைப்பூண்டி கூட்டுச்சாலை, எய்யில் வழி நான்கு முனை கூட்டுச்சாலை, தாயனூா், ஈயகுணம் கூட்டுச்சாலை ஆகிய இடங்களில் இருந்து எவ்வித வாகனங்களும் ஊருக்குள் வராத வகையில், காவல் துறையின் சாா்பில், தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்படுவா்.

எனவே, கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யவும், அமாவாசை ஊஞ்சல் உத்ஸவத்தில் கலந்து கொள்ளவும் பக்தா்கள் யாரும் வர வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com