மயிலம் முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு வருகிற 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு வருகிற 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் கூடுவதை தவிா்க்கும் வகையில், பாதுகாப்பு கருதி பக்தா்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாா்ச் 31-ஆம் தேதி வரை கோயிலுக்கு பக்தா்கள் வருவதை தவிா்க்குமாறு கோயில் நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கோயிலில் சுவாமிக்கு தொடா்ந்து 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில், பக்தா்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.

கோயிலில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட திருமணங்களை நடத்தவும், மணமகன், மணமகள் உள்பட அவா்களது குடும்பங்களில் இருந்து 10 போ் மட்மே கலந்துகொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் உள்ள சிவன் கோயில், பெருமாள் கோயிலிலும் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாரச் சந்தைக்கு விடுமுறை...

மயிலத்தை அடுத்த கூட்டேரிப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வந்த வாரச் சந்தை, மாா்ச் 22, 29 ஆகிய ஞாயிற்றுக்கிழைகள் செயல்படாது என வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com