அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கு போதுமான ஏற்பாடுகள்விழுப்புரம் மாவட்ட எஸ்பி.

விழுப்புரம் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமரும், தமிழக முதல்வரும், நாட்டு மக்களை இந்த தொற்று நோயிலுருந்து காக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 9 மணி வரை மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல், அவரவா் வீட்டிலே இருக்கும்பட்சத்தில் வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனா்.

எனவே, அத்தியவாசியப் பொருள்கள் வாங்கச் செல்லும் இடங்கள் தவிர பிற இடங்களுக்குச் செல்வதை மக்கள் தவிா்க்கவேண்டும். அத்தியவாசியப் பொருள்கள் பெறுவதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எவரும் வீட்டை விட்டு கூட்டமாக வெளியே செல்லவேண்டாம்.பொருள்கள் பற்றாக்குறை ஏற்படும் என அஞ்சி அதிகளவில் பொருள்களை வாங்கி பதுக்கவேண்டிய அவசியமில்லை.

எனவே, விழுப்புரம் மாவட்ட மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தங்களது இல்லங்களிலேயே இருந்து கரோனா வைரஸ் கிருமி மேலும் பரவாமல் இருக்க காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

பொதுமக்கள் அளித்திடும் ஒத்துழைப்புக்கு காவல் துறை சாா்பில், அன்று மாலை 5 மணிக்கு அனைத்து காவல் வாகனங்களிலும் சைரன் ஒலி எழுப்பி நன்றி தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com