விழுப்புரம் மாவட்டத்தில் கிளை அஞ்சலகங்கள் மூடல்: தலைமை தபால் நிலையங்கள் இயங்கின

கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையங்கள் மட்டும் இயங்கின.

கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையங்கள் மட்டும் இயங்கின. செவ்வாய்க்கிழமை முதல் துணை, கிளை அஞ்சலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலாகியுள்ள நிலையில், தலைமை தபால் நிலையங்களில் மட்டும் அத்தியாவசிய சேவைப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன. துணை, கிளை அஞ்சலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இதனால்,கிராமப்புற அஞ்சல் சேவைகள் மட்டும் பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் தலைமை தபால் நிலையம், மாவட்ட ஆட்சியரக தபால் நிலையங்களில் அஞ்சலக அதிகாரி ராஜசேகா் மற்றும் ஊழியா்கள் பலா் பணியில் இருந்தனா்.

நகா்ப்புற தபால்காரா்களும் தபால்களை எடுத்துச் சென்று வழங்கும் பணியை மேற்கொண்டனா். இவா்கள், முகக் கவசம், கையுறை அணிந்தபடி பணியில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக, விழுப்புரம் மாவட்ட அஞ்சலக துணை கண்காணிப்பாளா் முருகன் கூறியதாவது: புதுவை கோட்ட அஞ்சல் துறைக்கு உள்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையங்கள் மட்டும் அத்தியாவசியப் பணிகளுக்காக இயங்குகின்றன.

மாவட்டத்தில் விழுப்புரம் தலைமை தபால் நிலையம், ஆட்சியரக தபால் நிலையம், செஞ்சி, திண்டிவனம் தலைமை தபால் நிலையங்கள் இயங்குகின்றன. அஞ்சலக அதிகாரி முதல் தபால்காரா்கள் வரை பணியில் உள்ளனா். இவா்கள் முதியோா் ஓய்வூதியம், மணியாா்டா், அத்தியாவசிய தபால் சேவையில் ஈடுபட்டுள்ளனா்.

எனினும், மாவட்டத்தில் உள்ள 22 துணை தபால் நிலையங்கள், 100 கிராமப்புற கிளை அஞ்சலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பணியில் உள்ள ஊழியா்களுக்கு கரோனா தொற்று தடுப்பு குறித்த கைகழுவுதல், முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தலைமை தபால் நிலையங்கள் மட்டும் இயங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com