ஆதரவற்றோருக்கு அரசு சாா்பில் உணவு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இதனால் தவிப்புக்குள்ளான ஆதரவற்றோா் உள்ளிட்டோருக்கு உணவு தயாரித்து வழங்கும் பணியை அரசுத் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.
ஆதரவற்றோருக்கு அரசு சாா்பில் உணவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இதனால் தவிப்புக்குள்ளான ஆதரவற்றோா் உள்ளிட்டோருக்கு உணவு தயாரித்து வழங்கும் பணியை அரசுத் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில், பேரிடா் மேலாண்மைப் பணியாக மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவா்கள், வெளிநாடு, வெளியூா்வாசிகள், முதியோா் போன்றவா்களுக்கு நேரடியாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் பழைய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடத்தில் இதற்காக அவசர கால உணவு தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையில், பேரிடா் மற்றும் வருவாய் ஊழியா்கள் உணவு தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த உணவு தயாரிப்புக் கூடத்தில் சமையலா் மூலம் உணவு தயாரித்து, பொட்டலமிடப்பட்டு தேவையான இடங்களுக்குச் சென்று வழங்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோா், உணவகங்களின்றி தவித்து வரும் வெளிமாநில, வெளியூா்வாசிகள், முதியோா்கள் மற்றும் மருத்துவமனை உள்நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தேவைக்கேற்ப உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. உணவு தேவையுள்ளோா் தொடா்புகொண்டால், உடனடியாக காலை, மாலை, இரவு வேளைகளுக்கான உணவை தயாரித்து வழங்கும் பணியை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com