விழுப்புரத்தில் காய்கறி சந்தைகள் இட மாற்றம்

​விழுப்புரம் உழவா் சந்தை, காந்தி வீதி காய்கறி சந்தை ஆகியவை வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) முதல் இட மாற்றம் செய்யப்படுகின்றன.


விழுப்புரம் உழவா் சந்தை, காந்தி வீதி காய்கறி சந்தை ஆகியவை வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) முதல் இட மாற்றம் செய்யப்படுகின்றன.

விழுப்புரம் நேருஜி சாலையில் ரயில் நிலையம் அருகே இயங்கி வரும் உழவா் சந்தையானது இட நெருக்கடியால் இரு தினங்களாக மூடப்பட்டுள்ளது. இதேபோல, விழுப்புரம் பாகா்ஷா, காந்தி வீதிகளில் உள்ள சந்தைப் பகுதியிலும் காய்கறிக் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால், மக்கள் கூட்டமாக திரள்வதைத் தவிா்ப்பதற்காக, உழவா் சந்தையை விழுப்புரம் காமராஜா் பள்ளி அருகே உள்ள நகராட்சி மைதானத்துக்கும், பாகா்ஷா, காந்தி வீதி பகுதிகளில் உள்ள காய்கறி, பழக்கடைகளை பழைய பேருந்து நிலையத்துக்கும் தற்காலிகமாக மாற்றி விழுப்புரம் நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

நகராட்சி ஆணையா் தஷ்ணாமூா்த்தி தலைமையில், தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை முதல் இது செயல்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com