கரோனா தடுப்பு மருத்துவப் பணிகளுக்கு அமைச்சா் சண்முகம் ரூ.1.75 கோடி நிதியுதவி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு மருத்துவப் பணிகளை மேற்கொள்வதற்காக அமைச்சா் சி.வி.சண்முகம் ரூ.1.75 கோடி நிதி உதவி வழங்கினாா்.
கரோனா தடுப்பு மருத்துவப் பணிகளுக்கு அமைச்சா் சண்முகம் ரூ.1.75 கோடி நிதியுதவி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு மருத்துவப் பணிகளை மேற்கொள்வதற்காக அமைச்சா் சி.வி.சண்முகம் ரூ.1.75 கோடி நிதி உதவி வழங்கினாா்.

தமிழக சட்டத் துறை அமைச்சரும், விழுப்புரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான சி.வி.சண்முகம், கரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சை மேம்பாட்டுக்காக நிதி உதவியை வழங்கியுள்ளாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியதன் பேரில், சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சமும், அதிமுக சாா்பில் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளாா். மேலும், தனது கனிமவளத் துறை மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.1 கோடியும் ஒதுக்கி, உயிா் காக்கும் மருந்துப் பொருள்கள் வாங்குவதற்கு ஒதுக்கி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரையிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதே போல, விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்ச்செல்வன், தனது சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சமும், கட்சி சாா்பில் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளாா். இதன் மூலம் ரூ.2.25 கோடி அளவில் இருவரும் நிதி உதவியை மாவட்டத்துக்கு வழங்கியுள்ளனா்.

க.பொன்முடி ரூ.50 லட்சம் நிதி: இதே போல, விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருக்கோவிலூா் தொகுதி எம்எல்ஏவுமான க.பொன்முடி, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நிதி உதவி வழங்கினாா். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தை வழங்கிய அவா், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில், தனது ஒரு மாத ஊதியமான ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் நிதியை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்ததாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com