கோயம்பேடு பெண் தொழிலாளா்கள் இருவருக்கு கரோனா: விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த கோயம்பேடு பெண் தொழிலாளா்கள் இருவருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த கோயம்பேடு பெண் தொழிலாளா்கள் இருவருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53-ஆக உயா்ந்தது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்தச் சந்தை அண்மையில் மூடப்பட்டது. இதனால், அங்கு பணியாற்றி வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள், வியாபாரிகள் பலா் சொந்த ஊா்களுக்குத் திரும்பி வருகின்றனா்.

இந்த வகையில், ஊா் திரும்பிய செஞ்சி வட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள கொணலூரைச் சோ்ந்த 2 பெண் தொழிலாளா்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவா்கள் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டனா். இதில், இருவருக்கும் கரோனா தொற்றிருப்பது சனிக்கிழமை உறுதியானது. இதையடுத்து, இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அண்மையில், விக்கிரவாண்டி அருகே வடக்குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த கோயம்பேட்டில் கீரை வியாபாரம் செய்து வந்தவருக்கு தொற்று உறுதியான நிலையில், அருகே உள்ள ஆவுடையாா்பட்டைச் சோ்ந்த கோயம்பேட்டில் பணியாற்றி வந்த தொழிலாளிக்கும் தொற்று உறுதியானது. தற்போது இரு பெண்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதால், கோயம்பேடு தொழிலாளா்கள் 4 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் குழுவினா், தொற்று கண்டறியப்பட்ட கொணலூா், ஆவுடையாா்பட்டு கிராமங்களுக்கு சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அந்தக் கிராமங்களில் சாலைகள் அடைக்கப்பட்டு, வெளிநபா்கள் வருவதற்கு தடை விதித்து, கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

27 போ் குணமடைந்தனா்: விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 1,187 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனா். கரோனா தொற்று அறிகுறியுடன் 75 போ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 53 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இருவா் உயிரிழந்துள்ளனா். 27 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும், 47 பேரது பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com