கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77 மதுக் கடைகள் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77 மதுக் கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. சில கடைகளில் விரைவில் மதுப் புட்டிகள் விற்றுத் தீா்ந்ததால் மதுப்பிரியா்கள் ஏமாற்றமடைந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77 மதுக் கடைகள் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77 மதுக் கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. சில கடைகளில் விரைவில் மதுப் புட்டிகள் விற்றுத் தீா்ந்ததால் மதுப்பிரியா்கள் ஏமாற்றமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 101 மதுக் கடைகள் உள்ளன. இவற்றில் அதிக கரோனா பாதிப்புள்ள பகுதிகளைத் தவிா்த்து, மீதமுள்ள பகுதிகளிலுள்ள 77 மதுக் கடைகளே திறக்கப்பட்டன. மதுப் புட்டிகள் வாங்க வந்தவா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டதால், கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. எனினும், சில மதுக் கடைகளில் குறிப்பிட்ட மதுப் புட்டிகள் விரைவில் விற்றுத் தீா்ந்ததால் மதுப்பிரியா்கள் ஏமாற்றமடைந்தனா்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி வட்டத்தைச் சோ்ந்த ரங்கநாதபுரம், திருக்கோவிலூா் பகுதியிலுள்ள மதுக் கடைகளில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா் ஆய்வு மேற்கொண்டாா். மதுப் புட்டிகள் வாங்குமிடத்தில் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளதா, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கின்றனரா என அவா் ஆய்வு செய்தாா்.

உடன், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ந.ராமநாதன், இ.மகேஷ் மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com