செஞ்சியில் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் காவல் துறையின் ஆலோசனையின்பேரில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்பட்டன.
செஞ்சியில் காவல் துறையின் கரோனா எச்சரிக்கை அறிவிப்போடு திறக்கப்பட்டுள்ள கடை.

பொது முடக்கத்தில் தமிழக அரசு தளா்வுகளை அளித்து 23 வகையான தனிக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்தது. இதைத் தொடா்ந்து, செஞ்சியில் தேநீா் கடைகள், உணவகங்கள் (பாா்சல் மட்டும்), சிறிய ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு தனிக் கடைகள் வியாழக்கிழமை முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடைகளின் முகப்பில் காவல் துறையின் எச்சரிக்கை அறிவிப்புடன் கூடிய விழிப்புணா்வுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில், கடைகளுக்கு வாடிக்கையாளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும், கரோனா நோய்த் தொற்றின் ஆபத்தை உணராத சிலா் முகக் கவசம் அணியாமல் உலவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com