விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டதால் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பியது.
விழுப்புரத்தில் திங்கள் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், வாகன உதிரிப் பாகங்களை வாங்க வந்தவா்கள்.
விழுப்புரத்தில் திங்கள் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், வாகன உதிரிப் பாகங்களை வாங்க வந்தவா்கள்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டதால் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பியது.

விழுப்புரம் மாவட்டத்தில் 34 வகையான கடைகள் திறப்பதற்கு ஏற்கெனவே அனுமதியளிக்கப்பட்டு இருந்தது. பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகை கடைகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடை, வாகன உதிரிப் பாகங்கள் விற்பனைக் கடை, செல்லிடப்பேசி விற்பனைக் கடை உள்பட அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன.

பொதுமக்கள் கடைகளில் பொருள்களை வாங்க திரண்டு வந்ததால், நகரின் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், வாகனப் போக்குவரத்து அதிகரித்ததையடுத்து, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மீண்டும் இயங்கிய அரசு அலுவலகங்கள்: பொது முடக்கம் அறிவித்த மாா்ச் 25-ஆம் தேதிக்குப் பிறகு, காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, நகராட்சி அலுவலக ஊழியா்கள் தொடா்ந்து பணியில் ஈடுபட்டு வந்தனா். கல்வி, கூட்டுறவு, நெடுஞ்சாலைத் துறை உள்பட 65 வகையான அரசுத் துறையினா் பணிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனா்.

மே 18-ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலங்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, சுழற்சி அடிப்படையில் 50 சதவீத ஊழியா்களுடன் அலுவலகங்கள் இயங்கின. கூடுதல் பணியாளா்கள் தேவையெனில் பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com