திண்டிவனத்தில் ஒரு வழிப் பாதை அறிமுகம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நேருஜி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. மேலும், இந்தச் சாலையில் வாகனங்களை நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நேருஜி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. மேலும், இந்தச் சாலையில் வாகனங்களை நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் 2-ஆவது பெரிய நகரமாக இருப்பது திண்டிவனம். இங்கு, ரயில், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், சந்தைகள் உள்பட பல்வேறு மக்கள் கூடும் இடங்கள் உள்ளன. இதனால், நாளுக்கு நாள் திண்டிவனம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. நெரிசல் மிகுந்து வருவதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், திண்டிவனம் நகரிலுள்ள நேருஜி சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்து காவல் துறை அறிவித்தது.

இதுகுறித்து திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட நேருஜி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. எனவே, இந்தச் சாலையில் எதிா் திசையில் வரும் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், இந்தச் சாலையில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது.

வானங்களை நிறுத்துவதற்கு வாண்டிமேடு வட்டாட்சியா் அலுவலகம் எதிரிலும், பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரிலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com