அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்பு பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்

அரசுப் பணியாளா்களின் உரிமைகளைப் பறித்துள்ளதாக தமிழக அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவெண்ணைநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா்.
திருவெண்ணைநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா்.

அரசுப் பணியாளா்களின் உரிமைகளைப் பறித்துள்ளதாக தமிழக அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பொது முடக்க சிக்கன நடவடிக்கையாக மாநில அரசுப் பணியாளா்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிறுத்தம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிறுத்திவைப்பு, பயணப்படி ரத்து, புதிய பணியிடங்கள் உருவாக்கத் தடை, பணியிட பொது மாறுதல் ரத்து உள்ளிட்டவற்றை தமிழக அரசு அறிவித்தது.

அரசின் இந்த அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், அரசைக் கண்டிப்பதாகக் கூறியும், விழுப்புரம் மாவட்ட அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் அய்யனாா், பொருளாளா் குமரவேல், துணைத் தலைவா் நடராஜன், இணைச் செயலா் டேவிட் குணசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத் தலைவா் சிங்காரம், முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலா் அருணகிரி, மாநில பிரசார செயலா் சிவகுரு, பல்நோக்குப் பணியாளா்கள் சங்கப் பொருளாளா் சதீஷ், அமைப்புச் செயலாளா் ஆா்.சீனிவாசன் உள்ளிட்டோா் கோரிக்கை வலியுறுத்திப் பேசினா்.

திருவெண்ணெய்ல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராம்குமாா் தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா் முபாரக் அலி, மேலாளா்கள் பாலசந்தா், சையது, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடாசலம், பாண்டியன், நாகராஜன், முல்லை உள்ளிட்டோா் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தின் பல்வேறு அலுவலகங்களிலும் அரசுப் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com