விழுப்புரம் அஞ்சலகத்தில் தீ விபத்து: ரூ.28 லட்சம் ரொக்கம் தப்பியது

விழுப்புரம் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை இரவு திடீரென நிகழ்ந்த தீ விபத்தில், அங்கிருந்த கணினிகள், மேஜைகள் உள்ளிட்ட
விழுப்புரம் அஞ்சலகத்தில் தீ விபத்து: ரூ.28 லட்சம் ரொக்கம் தப்பியது

விழுப்புரம் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை இரவு திடீரென நிகழ்ந்த தீ விபத்தில், அங்கிருந்த கணினிகள், மேஜைகள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமாகின. அதனருகே இருந்த ரூ.28 லட்சம் ரொக்கம் தப்பியது.

விழுப்புரம் திருவிக வீதியில் தலைமை அஞ்சலகம் இயங்கி வருகிறது. பொது முடக்க காலத்திலும் அஞ்சல் சேவைப்பணிகள் தடையின்றி நடைபெற்று வருவதால், இந்த அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு, சனிக்கிழமை பணிகள் முடிந்து மாலை 6 மணிக்கு அலுவலா்கள் அஞ்சல் நிலைய அலுவலகத்தை மூடிச் சென்றனா். இந்த நிலையில், இரவு 8 மணிக்கு திடீரென அஞ்சல் நிலையத்தின் உள்ளே தீப்பிடித்து எரிந்தது. ஜன்னல் வழியாக தீப்பிடித்து எரிந்ததைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

விழுப்புரம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் சேதுராமன் மற்றும் போலீஸாா், விழுப்புரம் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று கதவைத் திறந்து பாா்த்தபோது, அலுவலகத்தில் நீண்ட வரிசையாக உள்ள கவுண்டா்களின் பின்பகுதியில் புகை மூட்டத்துடன் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. உடனடியாக தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் அஞ்சலக அதிகாரி அறையின் எதிரே உள்ள அலுவலரின் 2 மேஜைகள், அவற்றின் மீதிருந்த கணினிகள், பிரிண்டா் மற்றும் அதிலிருந்த அஞ்சல் அலுவலக காகிதங்கள் சில எரிந்து நாசமாகின.

தீ விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே உள்ள அறையிலிருந்த ரூ.28 லட்சம் ரொக்கம் தப்பியதாக அஞ்சலக ஊழியா்கள் தெரிவித்தனா். சம்பவம் குறித்து விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கா், கோட்டாட்சியா் ராஜேந்திரன், வட்டாட்சியா் கணேஷ் உள்ளிட்டோா் நேரில் வந்து விசாரணை நடத்தினா்.

கணினியை அணைக்காமல் சென்ால், உயா் வெப்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com