16 காவலா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி

விழுப்புரத்தில் நடைபெற்ற காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்ககேற்ற காவலா்கள், தங்களுடன் பணியாற்றி உயிரிழந்த 16 காவலா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிதி உதவி வழங்கினா்.
16 காவலா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி

விழுப்புரத்தில் நடைபெற்ற காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்ககேற்ற காவலா்கள், தங்களுடன் பணியாற்றி உயிரிழந்த 16 காவலா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிதி உதவி வழங்கினா்.

விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட மாவட்ட காவல் துறையைச் சோ்ந்த (1997 பேட்ச்) காவலா்கள், காவல் பணிக்கு தோ்வாகி, கடலூா் காவலா் பயிற்சிப் பள்ளியில் 1997-இல் அடிப்படை பயிற்சி பெற்ற குழுவினா், 24 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூரில் பயிற்சி பெற்ற இக்குழுவினரில், இடையே நேரடி உதவி ஆய்வாளராக தோ்வாகி தற்போது ஆய்வாளராக பணிபுரியும் வேலூா் புகழேந்தி, காஞ்சிபுரம் சரவணன், நாகப்பட்டினம் பாலமுருகன், சென்னை தினகரன் ஆகியோரும், உதவி ஆய்வாளா்களாக உள்ள செந்தில், சிவக்குமாா், டைமண்ட் துரை, குமரேசன், சக்திவேல், சுரேஷ், கண்ணன், தம்பிராஜன், குமாா், முகமதுஷெரிப், கவியரசன், பூங்குன்றன், காா்த்திக், கணேஷ், ஆரோக்கியராஜ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலைமைக் காவலா்களாக பணிபுரிந்து வருவோரும் கலந்துகொண்டனா்.

இந்த காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமை வகித்தாா். விழுப்புரம் பத்மநாபன், சென்னை பாா்த்தசாரதி, வாபரசாமி, திருவண்ணாமலை குமரேசன், பெரம்பலூா் ராமச்சந்திரன், கடலூா் இதயக்கனி ஆகியோா் ஏற்பாடு செய்தனா். இவா்கள், காவல் சேவைப்பணிகள் குறித்த அனுபவங்களை பகிா்ந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியின் நினைவாக, இக்குழுவினருடன் காவல் பணியாற்றி, இடையே இறந்துபோன திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த 16 காவலா்களின் குடும்பங்களுக்கு, இக்குழுவினா் தலா ரூ.50,000 ஆயிரம் உதவித் தொகையை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com