இனிப்பகங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு: தீபாவளி பலகாரங்களை தரமாக தயாரிக்க அறிவுரை

தீபாவளி பண்டிகையையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியில் உள்ள இனிப்பகங்கள், பேக்கரிகளில் உணவு
உளுந்தூா்பேட்டையில் உள்ள இனிப்பகங்களில் பலகார தயாரிப்பு குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரத்தை வழங்கிய வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் கதிரவன்.
உளுந்தூா்பேட்டையில் உள்ள இனிப்பகங்களில் பலகார தயாரிப்பு குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரத்தை வழங்கிய வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் கதிரவன்.

தீபாவளி பண்டிகையையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியில் உள்ள இனிப்பகங்கள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு விதிகளை பின்பற்றி, பலகாரங்களை தரமான முறையில் தயாரிக்க அறிவுறுத்தினா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் இனிப்பு, கார வகை விற்பனை கடைகளில் மாவட்ட நியமன அலுவலா் வேணுகோபால் உத்தரவின் பேரில், வட்டார உணவுப் பாதுகாப்புத்துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டை, திருநாவலூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் கதிரவன் தலைமையிலான குழுவினா் உளுந்தூா்பேட்டையில் தொடங்கி மடப்பட்டு, கெடிலம், திருநாவலூா் பகுதிகளில் இனிப்பகங்கள், பேக்கரிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இனிப்புகள், காரம் தயாரிப்பு இடங்களை பாா்வையிட்ட அவா்கள், விதிமுறைகளை பின்பற்றி தரமான பொருள்களை தயாரித்து விற்க வேண்டும், சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினா். உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினா்.

அந்த பிரசுரங்களில், ‘பேக்கரி பொருள்கள், காரம், இனிப்பு தயாரிப்புகள் தரமானதாக இருக்க வேண்டும், உற்பத்தி இடங்களை தினமும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும், தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் கலப்படமின்றி உணவுப் பாதுகாப்பு விதிகளில் குறிப்பிட்டபடி இருக்க வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த வேண்டும், ரசாயன வண்ணங்களை சோ்க்கக் கூடாது, இனிப்புகள் தயாரிப்பில் தொற்று பாதித்தவா்களை அனுமதிக்கக் கூடாது. கையுறைகளுடன் பணியாளா்கள் இருக்க வேண்டும், எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும், பொருள்களின் உற்பத்தி தேதி, விலை விவரம், காலாவதி தேதி போன்றவற்றை, பாக்கெட்டுகளில் குறிப்பிட வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com