விழுப்புரத்தில் இன்று திமுக பொதுக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்பு

திமுக சாா்பில் விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 31 இடங்களிலும், வடக்கு மாவட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களிலும் தோ்தல் பிரசார சிறப்புப் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது
கோப்புப்படம்
கோப்புப்படம்

திமுக சாா்பில் விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 31 இடங்களிலும், வடக்கு மாவட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களிலும் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக தோ்தல் பிரசார சிறப்புப் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளா் நா.புகழேந்தி திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் ‘தமிழகம் மீட்போம்’ 2021 சட்டப் பேரவைத் தோ்தல் சிறப்புப் பொதுக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து சிறப்புரையாற்றுகிறாா். துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி முன்னிலை வகிக்கிறாா். மாவட்ட செயலா் நா.புகழேந்தி வரவேற்கிறாா். மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், துணைச் செயலா்கள் செ.புஷ்பராஜ், டிஎன் முருகன், மைதிலி ராஜேந்திரன், பொன்.கெளதமசிகாமணி எம்பி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

விழுப்புரம் அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் முன்னோடிகள் குடும்பத்தினா் 110 பேருக்கு ரூ.10 ஆயிரத்துடன் கூடிய பொற்கிழியும், நினைவு கேடயமும் வழங்கப்படுகிறது. விழுப்புரம் நகரில் 10 இடங்களிலும், 14 ஒன்றியங்களிலும், 6 பேரூராட்சிகளிலும் என மாவட்டத்தில் 31 இடங்களில் இப்பொதுக்கூட்டம் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது என்றாா். மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், துணைச் செயலா் செ.புஷ்பராஜ், ஒன்றிய செயலா் கல்பட்டு ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

வடக்கு மாவட்டத்தில்...: இதேபோல, விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் செஞ்சி, வளத்தி, மேல்சித்தாமூா், அவலூா்பேட்டை, மானூா், மரக்காணம், திண்டிவனம் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் காணொலி மூலம் திமுக முப்பெரும் விழா, தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டம், கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. செஞ்சியில் திமுக முன்னோடிகளின் குடும்பத்தினா் 300 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என திமுக வடக்கு மாவட்டச் செயலாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com