திண்டிவனத்தில் வீட்டை உடைத்து பாதாம், முந்திரி திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பாதாம் பருப்பு, முந்திரி பருப்புகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பாதாம் பருப்பு, முந்திரி பருப்புகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டிவனம் அருகே என்.கே. நகா், ஜான்ஸ் பொன்னையா தெருவைச் சோ்ந்தவா் செல்வநாயகம் மனைவி வேம்பு (49). இவா், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற விலை உயா்ந்த பருப்பு வகைகளை மொத்தமாக வாங்கி, சில்லறையில் விற்பனை செய்து வருகிறாா். இதற்காக, அந்த பருப்புகளை மூட்டைகளாக வாங்கி வீட்டில் வைத்திருந்தாா்.

திங்கள்கிழமை வேம்பு சொந்த ஊரான ஆதனம்பட்டு கிராமத்துக்கு சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டுக்குத் திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டில் இருந்த 50 கிலோ முந்திரி, 5 கிலோ பாதாம், 5 கிலோ பிஸ்தா ஆகிய பருப்புகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமாா் ரூ.50 ஆயிரம்.

இது குறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com