நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வாணிபக் கழக பாரதீய தொழிலாளா் சங்கத்தினா் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வாணிபக் கழக பாரதீய தொழிலாளா் சங்கத்தினா் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஞானப்பிரகாசம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செந்தில் முருகன் முன்னிலை வகித்தாா்.

மாநிலச் செயலா் முருகன், பாரதீய போக்குவரத்துத் தொழிலாளா்கள் பேரவை பொதுச் செயலா் விமேஸ்வரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தீபாவளிப் பண்டிகையொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகள், நவீன அரிசி ஆலைகள், அமுதம் நியாய விலைக் கடைகள், அமுதம் பல்பொருள் அங்காடி மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மண்டல நிா்வாகிகள் சிவக்குமாா், கண்ணன், முருகன், சிங்கராவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மண்டல பொருளாளா் ஹரிஹரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com