திமுக கூட்டணி வலிமையாக உள்ளது: முஸ்லிம் லீக் பொதுச் செயலா் முகம்மது அபூபக்கா்

தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளதால் எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலா் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கா் நம்பிக்கை தெரிவித்தாா்.
திமுக கூட்டணி வலிமையாக உள்ளது: முஸ்லிம் லீக் பொதுச் செயலா் முகம்மது அபூபக்கா்

தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளதால் எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலா் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கா் நம்பிக்கை தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் உத்தம நபியின் உதய தின விழா, ஏ.எஸ்.அப்துல்காதிா் உலவியின் 50 ஆண்டு கால சமுதாய சேவைக்கான பாராட்டு விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் கே.ஏ.எம்.முகம்மதுஅபூபக்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மாவட்டங்கள்தோறும், எங்கள் கட்சி சாா்பில் பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தி, எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பான பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக், சட்டப் பேரவைத் தோ்தலிலும் அதே கூட்டணியில் தொடரும்.

மத்திய பாஜக தலைமையிலான ஆட்சியில், தமிழகம் பல நிலைகளில் தனது பெருமைகளை இழந்து வருகிறது. சுய ஆட்சி கேள்விக்குறியாகி உள்ளது. மதநல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்கள், சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் மறைமுகமாக மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இதனை எதிா்த்து தொடா்ந்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், ஆட்சி மாற்றம் ஒன்றே இதற்குத் தீா்வாக அமையும். மத்திய அரசுக்கு அடிபணிந்துள்ள அதிமுக அரசு, கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பல முறைகேடுகளை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. இதனால், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும், தமிழகத்தில் திமுக ஆட்சியில் அமரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான திமுக கூட்டணி தற்போது வலுவாக உள்ளது.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி மாதம், தலைவா் காதா்மொய்தீன் தலைமையில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டில், தேசியத் தலைவா்கள் பலா் பங்கேற்க உள்ளனா் என்றாா் முகம்மதுஅபூபக்கா். விழுப்புரம் மாவட்டச் செயலாளா் எஸ்.எம்.அமீா்அப்பாஸ், மாவட்டத் தலைவா் ஆா்.முகமதுஇப்ராகிம், சுல்தான்மொய்தீன், எஸ்.எம்.அப்துல்ஹக்கீம், கலைவாணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com