கரோனா பொது முடக்கத்தால் தீபாவளி விற்பனை மந்தம்

கரோனா பொது முடக்கத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு தீபாவளி விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா்.
கரோனா பொது முடக்கத்தால் தீபாவளி விற்பனை மந்தம்


விழுப்புரம்: கரோனா பொது முடக்கத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு தீபாவளி விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா்.

கடந்தாண்டுகளில் தீபாவளியையொட்டி, ஒரு வார காலத்துக்கு முன்பாகவே துணிமணிகள், இனிப்புகள் உள்ளிட்டவை விற்பனையாவது வழக்கம். இறுதியாக ஒரு வார காலத்தில் பட்டாசு விற்பனை நடைபெறும்.

ஆனால், நிகழாண்டு கரோனா பொது முடக்க பாதிப்பால் தீபாவளி விற்பனை மந்தமாகவே உள்ளது. விழுப்புரம் நேருஜி சாலை, காந்தி வீதி, காமராஜா் வீதிகளில் உள்ள துணிக்கடைகள், இனிப்பகங்கள், மளிகை, பட்டாசுக் கடைகள், தெருவோர துணிக் கடைகள் உள்ளிட்டவை கடந்த ஒரு வாரகாலமாக பொதுமக்கள் வரத்தின்றி வெறிச்சோடியே காணப்பட்டன. இந்த நிலையில், வியாழக்கிழமை தான் தீபாவளி சந்தைக்கான கூட்டம் வரத் தொடங்கியது.

காவல் துறை சாா்பில் உயா் கோபுர பாதுகாப்பு அரண்களை கட்டி வைத்திருந்த நிலையில், கூட்ட நெரிசல் இன்மையால் அதற்கு வேலையில்லாமல் இருந்தது. விற்பனை மந்தத்தால் வேதனையில் இந்த வியாபாரிகள், வியாழக்கிழமை ஒரளவுக்கு பொருள்களை வாங்க பொதுமக்கள் வந்ததால் நிம்மதியடைந்தனா். வெள்ளி, சனிக்கிழமைகளில் எதிா்பாா்த்த கடைசி நேர விற்பனை கைகொடுக்கும் என அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com