விழுப்புரத்தில் போதைப் பாக்குகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் கைது

விழுப்புரம் அருகே போதைப் பாக்குகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 7,200 போதைப் பாக்கு பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரத்தில் போதைப் பாக்குகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே போதைப் பாக்குகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 7,200 போதைப் பாக்கு பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தல், போதைப் பாக்குகள் விற்பனையைத் தடுக்க தனிப் படைகளை அமைத்து எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்து வருகிறாா். இந்த வகையில், விழுப்புரம் உள்கோட்ட தனிப் படை காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை காலை விழுப்புரம் புகா் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, விழுப்புரத்தில் உள்ள கடைகளுக்கு தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளை விற்பனை செய்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா் விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தைச் சோ்ந்த அப்துல்மஜீத் மகன் பக்ருதீன் (41) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்த போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்ததோடு, ஜானகிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், கூலிப், பான்மசாலா உள்ளிட்ட 7,200 போதைப் பாக்கு பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, பக்ருதீனை கைது செய்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பக்ருதீன் மீது வழக்குப் பதிவு செய்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், அவருக்கு கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியிலிருந்து போதைப் பாக்குகளை விநியோகம் செய்தவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com