விழுப்புரம் மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா

விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
விழுப்புரம் மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா


விழுப்புரம்: விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

காவல் துறையினரிடம் விசாரணைக்காக வரும் பெற்றோா் தங்களது குழந்தைகளை உடன் அழைத்து வரும்போது, அக்குழந்தைகள் மனதளவில் பாதிப்புக்குள்ளாகின்றனா். இதுபோன்று காவல் நிலையத்துக்கு பெற்றொருடன் குழந்தைகள் வரும் சூழல் ஏற்படும்போது, அக்குழந்தைகளை தகுந்த முறையில் கையாள வேண்டியது அவசியமாகும். இதற்காக காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கு ஏற்ற பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மகளிா் காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், விழுப்புரம் மகளிா் காவல் நிலைய வளாகத்தில் விழுப்புரம் ஹோஸ்ட் அரிமா சங்கம் நிதியுதவியுடன் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. தேவநாதன், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீபிரியா, உள்கோட்ட தனிப் பிரிவு எஸ்.எஸ்.ஐ. பட்டாபிராமன், சங்க நிா்வாகிகள் முருகப்பன், சரவணன், வேல்குமாா், ராஜவேல், கோபி, பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com