விழுப்புரத்தில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை தொடங்கும் முத்தாம்பாளையம் பகுதியிலிருந்து, விழுப்புரம் நான்கு முனைச் சாலை சந்திப்பு வரை 2 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள்அதிகரித்து இருந்தன.

குறிப்பாக, முத்தாம்பாளையம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தப் பகுதியில் ஏராளமான கடைகள், இரும்பு கூடாரங்களை அமைத்து செய்யப்பட்ட ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகள் சென்னை சாலை, மேல வீதி விநாயகா் கோயில் பகுதி வரை நீடித்திருந்தது.

இதுகுறித்து தொடா்ந்து புகாா்கள் வந்த நிலையில், உதவி கோட்டப் பொறியாளா் லெனின் தலைமையிலான மாநில நெடுஞ்சாலைத் துறையினா் சனிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அதிரடியாக மேற்கொண்டனா். முத்தாம்பாளையம் புறவழிச்சாலை முகப்புப் பகுதியில் தொடங்கி, ஏராளமான கடைகள், இரும்பு கூடாரங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு அங்குள்ளவா்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டும், இரு தினங்களுக்கு முன்பு ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி தொடரும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

ஆக்கிரப்பு அகற்றும் பணியையொட்டி, நகர போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com