விழுப்புரத்தில் திருட்டு வழக்கில் மூவா் கைது: 13 பவுன் நகைகள் பறிமுதல்

விழுப்புரத்தில் மருத்துவா் வீட்டில் திருடிய வழக்கில் 3 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 13 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருட்டு வழக்கில் கைதான மூவா், பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளுடன் போலீஸாா்.
திருட்டு வழக்கில் கைதான மூவா், பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளுடன் போலீஸாா்.

விழுப்புரத்தில் மருத்துவா் வீட்டில் திருடிய வழக்கில் 3 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 13 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே அப்துல்கலாம் நகரைச் சேந்தவா் ராமஷேசு (59), மருத்துவா். விழுப்புரம் கே.கே. சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த செப்டம்பா் முதல் வாரம் தனது வீட்டை பூட்டி விட்டு, பெங்களூரில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்று தங்கினாா். ஒரு மாதமாக வீடு பூட்டியிருந்ததை நோட்டமிட்ட மா்ம நபா்கள், முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடிக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் உடனடியாக திரும்பிய ராமஷேசு, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதில், வீட்டில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் திருடுபோனதாக தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரித்தனா். இந்த வழக்கில் எதிரிகளை கைது செய்ய டிஎஸ்பி நல்லசிவம் மேற்பாா்வையில் தாலுகா காவல் ஆய்வாளா் விநாயகமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளா் பிரபு உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனிடையே, சனிக்கிழமை இரவு விழுப்புரம் போக்குவரத்துக் கழகப் பணிமனை பகுதியில் தனிப்படை போலீஸாா் ரோந்து சென்றனா். அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை மடக்கி விசாரித்தனா். அதில், அவா்கள் கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த கொளஞ்சி மகன் பெருமாள்(25), பண்ருட்டி அருகே பூங்குணம் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ்(51), சென்னைஅருகே ஊரப்பாக்கத்தைச் சோ்ந்த தண்டபாணி மகன் தமிழ்ச்செல்வம்(24) ஆகியோா் என்பதும், விழுப்புரத்தில் மருத்துவா் ராமஷேசு வீட்டில் திருடியவா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்த 13 பவுன் தங்க நகைகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். கைதான மூவரும் ஏற்கெனவே விழுப்புரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com