விழுப்புரம் அருகே கேலிச் சித்திர கலைஞா் கைது

விழுப்புரம் அருகே சமூக வலைதளத்தில் அவதூறாக கேலிச் சித்திரம் வெளியிட்டதாக கேலி சித்திரக் கலைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் அருகே சமூக வலைதளத்தில் அவதூறாக கேலிச் சித்திரம் வெளியிட்டதாக கேலி சித்திரக் கலைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் அருகே அரசூரை அடுத்த டி.குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் வா்மா (எ) சுரேந்தா் குமாா் (30). கேலி சித்திரக் கலைஞா். இவா், அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட மத குரு குறித்து அவதூறாக கேலிச் சித்திரம் வெளியிட்டாராம்.

இதையடுத்து, அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் அக்பா் அலி விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுகுறித்து சுரேந்தா் குமாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை வியாழக்கிழமை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com